முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(23 - 30 அக்டோபர் 2017)
வார பலன்
 
மேஷம்
எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். குருவும், புதனும் சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 6-ம் வீட்டில் சுக்ரன் மறைந்திருப்பதாலும், 7-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதாலும் மனைவிக்கு முதுகு வலி, மூச்சுப் பிடிப்பு வந்து செல்லும். அவர் ஏதாவது கோபத்தில் கத்தினால் அனுசரித்துப் போங்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப ரகசியங்களை சொல்ல வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரர்களுடன் மோதல் வந்து நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 28, 29 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு
 
ராசி குணங்கள்