முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
மேஷம்
எதிரிக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! குருபகவான் இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். 3-ந் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவியின் ஆரோக்யம் சீராகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள், புது நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். கூடுதல் மதிப்பெண் பெற்றால் நல்லது. கூடுதலாக நேரம் ஒதுக்கி படித்தால் நல்லது என்றெல்லாம் கவலைப்படுவீர்கள். அவர்களின் உடல் நலமும் பாதிக்கும். உங்களது ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க வலுப்பெற்று அமர்ந்திருப்பதால் பூமி, வீடு வாங்குவது சாதகமாக அமையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. உங்களை சிலர் ஓரம் கட்ட நினைப்பார்கள். உங்களின் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் எல்லாவற்றையும் முறியடிப்பீர்கள். கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியால் முன்னேறும் மாதமிது
 
ராசி குணங்கள்