முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(27 - 3 ஏப்ரல் 2017)
வார பலன்
 
மகரம்
யாரையும் புண்படுத்தாமல் நயமாகப் பேசும் நீங்கள் சபை நாகரீகம் அறிந்தவர்கள். சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் முயற்சிகள் கைக்கூடும். திடீர் யோகம் உண்டு. குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடனாக கொடுத்தப் பணம் கைக்கு வரும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை பெறுவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வருவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 31, 1, 2, அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: தென்கிழக்கு
 
ராசி குணங்கள்