முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
மகரம்
வசதி வந்த போதும் வறுமையை மறக்காதவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் யோகாதிபதி சுக்ரன் சென்றுக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு இருந்ததே! அந்த பற்றாக்குறை குறைந்து பணப்புழக்கமும் அதிகரிக்கும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரே ஓவனை மாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோவில் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சூரியன், புதன் சாதகமாக இருப்பதால் புது வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிட்டும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. செவ்வாயும் சாதகமாக இருப்பதால் பழைய மனையை விற்று சிலர் புதிதாக வீட்டு மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். குரு 10-ம் வீட்டிலும், ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். சின்ன சின்ன அவமரியாதை சம்பவங்கள் நிகழக்கூடும். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்க
 
ராசி குணங்கள்