முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(19 - 26 ஜூன் 2017)
வார பலன்
 
கும்பம்
அருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! சூரியன் 5-ல் அமர்ந்திருப்பதால் மனஉளைச்சல், மனைவியுடன் வாக்குவாதம் வந்துச் செல்லும். பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். அன்பாகச் சொல்லி புரிய வையுங்கள். ஆனால் புதனும் 5-ம் வீட்டில் நிற்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை கிட்டும். நேர்மறை எண்ணம் பிறக்கும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசி குறை நிறைகளை அலசி ஆராய்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் மேற்படிப்பு தொடர இடம் கிடைக்கும். சுபகாரியங்களால் வீடு களை கட்டும். மூத்த சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் அழகு, இளமைக் கூடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள் திருமணம் கூடி வரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 26 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே அதிஷ்ட திசை: வடக்கு
 
ராசி குணங்கள்