முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(23 - 30 அக்டோபர் 2017)
வார பலன்
 
மீனம்
தலைமைப் பதவியில் அமர வைத்தாலும் தடம் மாறாத நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் கொண்டவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் புது சிந்தனைகள் மனதில் தோன்றும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். புது வேலை அமையும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வழக்கு சாதகமாகும். கேது வலுவாக இருப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். கடந்த காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை நினைத்து அவ்வப்போது உற்சாகமடைவீர்கள். வேற்றுமதத்தவர்களால் திருப்பம் உண்டாகும். செவ்வாய் 7-ல் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வந்து நீங்கும். சொத்து, வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புது நபர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் வேண்டாம். தட்டு தடுமாறி கரையேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 28 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு அதிஷ்ட திசை: வடகிழக்கு
 
ராசி குணங்கள்