முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
மீனம்
ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே! சுக்ரன் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். வாகனப் பழுது சரியாகும். கோபம் குறையும். புது வேலைக் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த ஒரு தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். 16ந் தேதி வரை 6-க்குரிய சூரியன் 8-ல் அமர்ந்ததால் மதிப்புக் கூடும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பலவீனத்தால் நெஞ்சு வலிக்கும் பயந்துவிடாதீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் குறையும். உங்களுக்கு உதவ வேண்டிய உங்கள் ராசிநாதன் குரு 8-ம் இடத்தில் மறைந்துக் கிடப்பதால் எந்த வேலையாக இருந்தாலும் இழுபறியாகி முடியும். நீங்கள் எது பேசினாலும் சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். நீங்களும் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுவீர்கள். பிரச்னைகள் வந்துவிடுமோ என்ற பயம் வரக்கூடும். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். ஒரே நாளிலேயே வெகுதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. லாப வீட்டில் கேது தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். செவ்வாய் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சளித் தொந்தரவு, மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். உயர்கல்வியை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். நாலும் தெரிந்த நல்
 
ராசி குணங்கள்