முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(14 - 21 ஆகஸ்டு 2017)
வார பலன்
 
ரிஷபம்
முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! சப்தமாதிபதி செவ்வாயும், சூரியனும் சாதகமாக இருப்பதால் தைரியமாக எதையும் முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். கோபம் குறையும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். என்றாலும் கண்டகச் சனி தொடர்வதால் எதிலும் ஈடுபாடற்ற நிலை, தலைச்சுற்றல், மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு முதுகு வலி, முழங்காலில் அடிப்படுதல், மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சுறுசுறுப்பாவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் விரைந்து முடியும். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். ஆனால் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். விவேகமான முடிவுகளால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 20 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம் அதிஷ்ட திசை: தென்கிழக்கு
 
ராசி குணங்கள்