முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
மிதுனம்
பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! இராஜ கிரகங்களான சனியும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை விற்று சிலர் டவுன், நகர எல்லையில் சொத்து வாங்குவீர்கள். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நிச்சயமாகும். செவ்வாய் இந்த மாதம் முழுக்க கேந்திரபலம் பெற்று 4-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். புதன் 6-ல் சென்று மறைந்திருப்பதால் கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு, காய்ச்சல் வரக்கூடும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் நீண்ட நாட்களாக வீடு மாற நினைத்தவர்களுக்கு வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப புது வேலை அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். புது முதலீடு செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். மாறுபட்ட அணுகுமுறையாலும், சமயோஜித புத்தியாலும் சாதித்துக் காட்டு
 
ராசி குணங்கள்