முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(23 - 30 அக்டோபர் 2017)
வார பலன்
 
கடகம்
முடிவுகளைப் பற்றி கவலைப் படாமல் நியாயத்திற்காக மோதிப்பார்ப்பீர்கள். மந்திரியாக இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவீர்கள். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் நிம்மதி கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். சிலர் பழைய காலி மனையை விற்று விட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் ஆடை, ஆபரணங்கள் சேரும். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பழுதான தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிலர் உங்களை கடுமையாக விமர்சிப்பார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு க¬¬யை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. உத்யோகத்தில் மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். தெய்வபலத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு
 
ராசி குணங்கள்