முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
கடகம்
சரிநிகர் சமத்துவத்திற்காக போராடுபவர்களே! இந்த மாதம் முழுக்க பிரபல யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆனால் சனி 5-ல் நிற்பதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கும். பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிய வேண்டி வரும். சுக்ரனும், புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ராசிக்குள் ராகு நிற்பதாலும், 7-ல் கேது தொடர்வதாலும் டென்ஷன், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே பச்சை கீரை, காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இடைத்தரகர்களை நம்பி பணத்தை தந்து விட்டு ஏமாற வேண்டாம். 4-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கும் கை, கால் வலிக்கும். சோர்வு, அலுப்பு வந்துப் போகும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் கால, நேரம் பார்க்காமல் உழைத்தாலும் உயரதிகாரிகள் குறைக் கூறத்தான் செய்வார்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் சமாளித்து இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.
 
ராசி குணங்கள்