முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(23 - 30 அக்டோபர் 2017)
வார பலன்
 
சிம்மம்
தப்பு செய்தவர்களை தட்டிக் கேட்கும் நீங்கள், உறவைனர்களைக் காட்டிலும் நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவீர்கள். ராசிநாதன் சூரியன் நீச்சமானாலும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்டப் ப்ளான் அப்ரூவலாகி வரும். பணப்புழக்கம் பரவாயில்லை. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால் இடம், பொருள் ஏவலறிந்து பேசப்பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், வீண் விரையம், ஏமாற்றம், மறைமுக விமர்சனங்களெல்லாம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமிப்புச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 29 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு
 
ராசி குணங்கள்