முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(19 - 26 ஜூன் 2017)
வார பலன்
 
துலாம்
விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தள்ளிப் போன விஷயம் உடனே முடியும். அழகு, இளமைக் கூடும். கணவருடன் இருந்த மோதல் விலகும். மின்னணு, மின்சார சாதனப் பழுதை சரி செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு 12-ல் மறைந்திருப்பதால் பயணங்கள், தூக்கமின்மை, வீண் செலவுகள், கடன் பிரச்னைகள் வரக்கூடும். ராகு 11-ம் வீட்டில் தொடர்வதால் வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். கேது 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். சந்தை நிலவரம் அறிந்து சரக்குகள் கொள்முதல் செய்யப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 26 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், கிரே அதிஷ்ட திசை: வடகிழக்கு
 
ராசி குணங்கள்