முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
துலாம்
நாடி வருவோருக்கு நல்லதைச் செய்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிரச்னைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். உறவினர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வாகனம் பழுதாகி சரியாகும். என்றாலும் சூரியன் சாதகமாக இல்லாததால் உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் நிலை பாதிக்கும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். ஜென்ம குரு நடைபெறுவதால் அஜீரணப் பிரச்னை, வயிற்று உபாதை, நீர் சுருக்கு, கணுக்கால் வலி வந்துப் போகும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சில நேரங்களில் தவறான மருந்து, மாத்திரைகளால் கூட பாதிப்புகள் வரக்கூடும். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ராசிக்கு 12-ல் செவ்வாய் நிற்பதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் இருக்கும். அவ்வப்போது தூக்கம் கெடும். உடன்பிறந்தவர்களால் மனஉளைச்சல் ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பாதச் சனி தொடர்வதுடன், சர்ப்ப கிரகங்களும் சாதகமாக இல்லாததால் வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பணம், நகை மற்றும் கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய மாதமிது.
 
ராசி குணங்கள்