முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(23 - 30 அக்டோபர் 2017)
வார பலன்
 
விருச்சிகம்
கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். கேது வலுவாக 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளுக்கு தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் நடந்தேறும். லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்பதால் பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகைத் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 12-ல் குரு நிற்பதுடன், சூரியனும் 12-ல் நுழைந்திருப்பதால் வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி, திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்துப் போகும். பழைய கசப்பான அனுபவங்களையெல்லாம் நினைவுக்கூர்ந்து நிம்மதியை இழந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியமாக புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 28, 29 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு அதிஷ்ட திசை: மேற்கு
 
ராசி குணங்கள்