முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(19 - 26 ஜூன் 2017)
வார பலன்
 
தனுசு
ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகன வசதிப் பெருகும். சூரியன் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. குரு 10-ம் வீட்டில் நிற்பதால் யாருக்காகவும் உறுதி மொழித் தர வேண்டாம். கேது 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வேற்றுமொழியினரால் பலனடைவீர்கள். அரசியல்வாதிகளே! அதிகம் உழைக்க வேண்டி வரும். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். நல்லவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனை வளம் பெருகும். புதிய நட்பால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 23, 24 அதிஷ்ட எண்கள்: 6, 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெளிர்நீலம் அதிஷ்ட திசை: தெற்கு
 
ராசி குணங்கள்