முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
நவம்பர் 2017
மாத பலன்
 
தனுசு
தன்கையே தனக்குதவி என்று வாழ்பவர்களே! இந்த மாதம் பிறக்கும் போது உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன், புதன், குரு போன்ற முக்கிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாயும் இந்த மாதம் முழுக்க 10-ம் இடத்திலேயே தொடர்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் உடல் நிலை சீராகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சில உதவிகள் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றி ஒரு பயம் இருக்கும். யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே சென்று வருவது நல்லது. காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வரக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினரே! புகழடைவீர்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பெருமைப்படும்படி நடந்துக் கொள்வீர்கள். செல்லு
 
ராசி குணங்கள்