முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
31 அக்டோபர் 2014
தின பலன்
 
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை,மஞ்சள்
 
 
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண்,வெள்ளை
 
 
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்
 
 
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ்
 
 
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
 
 
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு,கிரே
 
 
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,வைலெட்
 
 
விருச்சிகம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
 
 
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு,பிங்க்
 
 
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்
 
 
வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்களால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு
 
 
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்-. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை