முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
ஆகஸ்டு 2017
மாத பலன்
 
மேஷம்
எதிர்பார்ப்புகள் இல்லாமல் எதையும் செய்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்களின் அடிப்படை வசதி, வாய்ப்புகள்....
 
 
ரிஷபம்
உதவும் குணத்தால் உயர்ந்தவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.....
 
 
மிதுனம்
ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.....
 
 
கடகம்
மிதமாக யோசித்து வேகமாக செயல்படுபவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களும் வாங்குவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராகு ராசிக்குள் நிற்பதுடன், நெருப்பு....
 
 
சிம்மம்
அண்டமே சிதறினாலும் அஞ்சாதவர்களே! 16-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்து நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று....
 
 
கன்னி
சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்துபவர்களே! 16-ந் தேதி வரை லாப வீட்டிலும், 17-ந் தேதி முதல் 12-ல் மறைந்தாலும் சூரியன் ஆட்சிப் பெற்று அமர்வதால் அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ஷேர் மூலமாக பணம் வரும்.....
 
 
துலாம்
தன்கையே தனக்குதவி என்று வாழ்பவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான புதனும் சாதகமாக....
 
 
விருச்சிகம்
திடீர் முடிவுகள் எடுப்பவர்களே! உங்களுக்கு சாதகமாக சுக்ரன் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை....
 
 
தனுசு
கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே! 16-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு சூரியனும், 28-ந் தேதி வரை செவ்வாயும் 8-ல் மறைந்திருப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சோர்வு, களைப்பு....
 
 
மகரம்
நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! சுக்ரன் 6-ம் வீட்டில் சென்று மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்களும் வரும். மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகு வலி, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். மனைவி....
 
 
கும்பம்
நாடிவருவோருக்கு நல்லதைச் செய்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் கம்பீரமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். தொட்ட தெல்லாம் துலங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் இருந்த தேக்க....
 
 
மீனம்
நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் பேசுபவர்களே ராசிநாதன் குரு உங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் அழகு, இளமைக் கூடும். தைரியமாக சவால்களை ஏற்றுக் கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் கூடி வரும். திருமணம், சீமந்தம்,....