முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
21 அக்டோபர் 2014
தின பலன்
 
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
விருச்சிகம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
 
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பணிகளால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பிரச்சனை ஓயும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு