மேஷம்
இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்